32 Total Views , 1 Views Today
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்..!!
கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் அன்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக இரவு 9.24 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் மீது பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.. அதில் விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது
அதன் பின் சீரமைப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு நேற்று மாலையே இரண்டு தண்டவாளங்களில் புரண்டு கிடந்த இரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர்..
விபத்து நடந்த அன்று இரவு காயமடைந்த 19 பேரில் மூன்று பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் 4 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் 12 பேர் கவரைபேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அந்த இரயில் பயணித்த இதர பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து., அவற்றை உடனடியாக செய்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இந்த விபத்தினால் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத பயணிகள் 800க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டை கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகளை அரசு செய்து கொடுத்ததுடன், 20க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மூலம் பயணிகளை பொன்னேரி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து, சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதால் பெரிதளவில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்து கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..