அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர்!

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அன்பழகனின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்பாக்கம் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார்.

அன்பழகனின் மறைவு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்ச்செல்வம் அதில், “பொதுவாழ்வில் அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார். தற்போது பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

What do you think?

பெண்ணின் வாழ்க்கை துயரத்தை கேட்டு கண்கலங்கிய மோடி

சச்சின், சேவாக், யுவராஜ் : டி-20 போட்டியில் புதிய அவதாரம்