‘காய்ச்சல், சளி இருந்தால் திருப்பதிக்கு வர வேண்டாம்’ தேவஸ்தானம் அறிவிப்பு!

காய்ச்சல், சளி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மிகவும் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பின்பு தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்விற்காக குறும்படம் ஒன்றை தேவஸ்தானம் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மருந்துகள் மூலம் சுத்தம் செய்யப்படவுள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். மற்றவர்களிடம் 3 அடி தூரத்தில் இருந்தபடி பேச வேண்டும் என்றும் அறிவுறுத்திருத்தினார்.

மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் திருமலையில் உள்ள மருத்துவனையில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

குறிப்பாக, காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அது குணமான பின்பு திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

What do you think?

‘விஜய் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அஜித்’ வைரலாகும் புகைப்படங்கள்!

60வது வயதில் திருமணம் செய்துகொண்ட காங்கிரசின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்!