புரட்டாசி 2வது சனி பார்த்தசாரதி கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!! ஆலய நிர்வாகம் செய்து கொடுத்துள்ள வசதி…!!
இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பக்தர்கள் கூட்டம் வழக்கதை விட அதிகரித்துள்ளது
புரட்டாசி மாதம் தொடங்கிய நாளில் இருந்தே பெருமாள் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய சனிக்கிழமை யுடன் இணைந்து வருகிறது. அதனால் இன்றைய தினம் பெருமாளுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. எனவே பெரும்பாலும் இன்றைய நாளில் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்..
அந்த வகையில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசி திதி என்பதால் சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. சென்னையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று பார்த்தசாரதி கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு துளசி மாலையை அணிவித்து வழிபட்டனர்..
இன்று வழக்கத்தை விட நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்களின் கூட்டம்.. அதிகரித்துள்ளது.. மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கூடுதல் பார்க்கிங் வசதி., மற்றும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி உள்ளிட்டவைகள் செய்து தரப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..