சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!
வைகாசி மாதம் பிறந்ததும், வைகாசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று மாலை திறக்கப்பட்டது.
வருடந்தோறும் இந்த பூஜை வைகாசி மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
இதற்காகவே மே 14ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மே 15ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெறும். மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார், 5 நாட்களுக்கு இந்த சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப் பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. தரிசனத்திற்காக முன் பதிவு செய்த பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி