சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு? – முதலமைச்சர் ஆலோசனை

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், டிஜிபி திரிபாதி ஆகியோர் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து, சென்னை சிஏஏ போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரு தினங்களுக்கு முன்பு, குரியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற கோரியும், தமிழக சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த இப்போராட்டத்தில் புகுந்த போலீசார், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தடியடி நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து, போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரு தினங்களாக நடந்து வரும் இப்போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்துகொண்டு போலீசாரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாகை, திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

மேலும், திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளன. இடைவிடாது நடக்கும் போராட்டம் மேலும், தீவிரமடைந்து ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மெரினா புரட்சி போன்று மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி திரிபாதி, ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை செய்து வருகிறார். இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உள்துறை செயலாளர் பிரபாகர், உளவுத்துறை செயலாளர் ஐஜி சத்தியமூர்த்தியும் பங்கேற்றுள்ளனர். 

What do you think?

இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!

வீதிக்கு வாங்க ரஜினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்