பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி.க்கு 3ஆண்டு சிறை..!!
கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் சிறப்பு டிஜிபி யாக பணி புரிந்துள்ளார். அவருடன் பணி புரிந்த பெண் எஸ்.பி.க்கு, டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகார் அளிக்க செல்லும் பொழுது டி.ஜி.பி ராஜேஷ்தாஸின் வலியுறுத்தலின் பெயரில் செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் என்னை புகார் கொடுக்க விடாமல் செய்தார். இருப்பினும் சி.பி.யை.யில் பெண் எஸ்.பி புகார் அளித்துள்ளார்.
அதன் பெயரில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பின் இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.பி.கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டாக இந்த வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது இந்த வழுக்கு முடிவிற்கும் வந்துள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்தவர்கள் 138 முறை விசாரணைக்கு அழைத்து கொள்ளப்பட்ட அரசு தரப்பு சாட்சிகளை 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் இருவர் மீதும் 400 பக்க குற்ற பத்திரிகையை, விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதன் பெயரில் நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பை விசாரணை செய்தார். நடந்த விசாரணையில் தகுந்த ஆதாரங்களுடன் சமர்பித்ததால்.., டி.ஜி.பி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறையும், அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.பி. கண்ணுக்கு 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பை வழங்கினார்.