தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் ஊழல்…!துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் ஊழல்கள் தலைவிரித்தாடுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில், மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மட்டும் பூஜ்ஜியம் என மத்திய அரசு கூறவில்லை, தமிழக அரசையும் சேர்த்து தான் எனக் கூறினார்.

தமிழகத்தில் ஸ்மார் சிட்டி அமைப்பதில் ஊழல்…!

தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவித்த துரைமுருகன், இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறினார். திட்டங்களுக்கு நிதியை மட்டும் ஒதுக்கீடு செய்பவர்கள், பணிகளை செய்வதில்லை எனக் கூறினார். ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இது குறித்து விரைவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

What do you think?

அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா…!

மதுவை கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைது…!