குஜராத் அணியை வீழ்த்திய தோனி..! மீண்டும் சி.எஸ்.கே அணி வெற்றி..!
அகமதாபாத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் கிரிக்கெட் போட்டி நடக்குமா..? நடக்காதா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த போது.., ஆட்டம் தொடரும் என்று. நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐ.பி.எல் 2023க்கான இறுதி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிடையே நடைபெற்றது. குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது, பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவரில் மூன்று பந்து வீசிய பின் மழை தொடங்கவே, டாக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 171 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணையித்துள்ளனர்.
மழை ஓய்ந்ததும் ஆட்டத்தை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.., 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் கடந்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என இருந்த போது, ஜடேஜா 1 சிக்சர் அடித்தார். கடைசி பந்தை பவுன்டரிக்கு அடித்து “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை” வெற்றி பெற வைத்தார்.
ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. வெற்றி பெற்றவுடன், சி.எஸ்.கே அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும், ஆட்டம், பாட்டம் மற்றும் வெடி என கொண்டாடி வருகின்றனர்.
-வெ.லோகேஸ்வரி.