புலியை தில்லாக படம் பிடித்த தோனி – வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட்டின் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணிக்காக மூன்றுவிதமான உலகக் கோப்பையையும் பெற்றுதந்த ஒரே கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு ரசிகர்கள் ஏராளம். மைதானத்திலும் சரி பொதுவெளியிலும் சரி இவரது செயல்பாடுகள் அனைத்தும் வைரலாகி விடும். சில நாட்களுக்கு முன்புதான் இவர் பானி பூரி தயாரிக்கும் வீடியோ ஒன்று வைரலானது.

View this post on Instagram

When u spot the tiger on ur own and he obliges u with just enough time to click a few pics.Visit to kanha was outstanding

A post shared by M S Dhoni (@mahi7781) on

இந்நிலையில், தோனி தனது குடும்பத்துடன் மத்திய பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசிய பூங்காவை இரு தினங்களுக்கு முன்னர் விசிட் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த புலியை படம் பிடித்துள்ள அவர், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பூங்காவைப் பற்றி, ‘அவுட் ஸ்டாண்டிங்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தோனியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்களும் இந்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

What do you think?

மனித உரிமை மீறல் – இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை

தொடரும் கொரோனா வைரஸ் மரணம்; பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு