கிரிக்கெட் கிரவுண்டில் ரசிகர்கள் அமரக்கூடிய இருக்கைக்கு தல தோனி பெயிண்ட் அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிக்காக சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியின் போது தோனி இந்த வேடிக்கையான செயலை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் கூல் எம்.எம்.எஸ் தோனி கிரிக்கெட் மைதானத்தில் எவ்வளவு கூல் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. டிராக்டரில் ஏறி வயலை உழுவது, தன் வீட்டில் ஆடுகளுடன் விளையாடுவது, சாலையில் பைக் ரெய்டு செல்வது, செல்ல மகளை கொஞ்சி விளையாடுவது என தல தோனி செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாவது உண்டு.
சமீபத்தில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நாற்காலிகளுக்கு வண்ணம் தீட்டினார். சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் தங்கி பல நாட்களாக அங்கு பயிற்சியில் ஈடுபட்ட தோனி, நேற்று ஸ்டாண்டில் உள்ள நாற்காலிகளுக்கு வண்ணம் தீட்டினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணியில் இருந்து விடைபெற விரும்புவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு தோனி சென்னையில் விளையாட உள்ள கடைசி போட்டி தான் ஐபிஎல்லில் கடைசி போட்டியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
https://twitter.com/ChennaiIPL/status/1640206958086221825