‘மீண்டும் சேப்பாக்கத்தில் தோனி’ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

13வது ஐபிஎல் தொடர் இம்மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

வரும் ஐபிஎல் தொடர் யாருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதோ இல்லையோ? சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக தோனியின் தீவிர ரசிர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். ஏனெனில் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

தோனி ஓய்வுபெற போகிறார் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்பட்டது. மேலும் தோனி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டுமானால் கண்டிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தோனி

இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வண்ணம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி கிரிக்கெட் களம் புகுந்துள்ளதால் அவரை காண ஏராளாமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு படையெடுத்தனர். தோனி பயிற்சியின் போது அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

What do you think?

நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகும் அருவா படத்தின் கதை இதுவா?

‘அரசியலுக்காக குத்துசண்டை’ சல்பேட்டாவின் கதை!