‘ரசிகர்கள் என்னை தல என்று கூப்பிடும் போது எனக்கு இப்படி தான் தோணும்’ மனம் திறந்த தோனி!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தோனி ரசிகர்கள் தல என்று அழைக்கும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படும் என்பது குறித்து பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் தோனி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக தற்போது சென்னைக்கு வந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் களம் புகுந்துள்ளதால் அவர் பயிற்சியில் ஈடுபடும் போது ஏராளாமான ரசிகர்கள் திரண்டு தோனி, தோனி என்று உற்சாகபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தோனி ரசிகர்கள் தல என்று அழைக்கும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படும் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “நான் எப்பொழுதெல்லாம் சென்னைக்கு வருகிறேனோ அப்போதெல்லாம் ரசிகர்கள் என்னை தல என்று தான் அழைக்கிறார்கள். யாரும் என்னுடைய பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. தல என்றால் சகோதரன் என்று தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தப் பெயர்தான் எனக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது. தல என்று அழைக்கும் போது, அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பும் தான் அதில் வெளிப்படுகிறது” என்று கூறினார்.

What do you think?

‘டெல்லி கலவரத்தை மறைக்கவே கொரோனா வைரஸ் பீதி’ மம்தா அதிரடி!

‘வெட்டி கொலை செய்வோம்’ முதலமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்!