தயிரில் உப்பு.. தயிரில் சர்க்கரை.. எது நல்லது..?
பண்டைய காலங்களில் இருந்து தயிரானது நமது உணவு பொருட்களில் உள்ளது. இதில் பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிரை உணவுடன் சாப்பிடும்போது செரிமானம் சீராகிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிடுவதா அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதா? எது நல்லது என தெரியுமா?
தயிர் நன்மைகள்:
தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளது, இது செரிமானத்தை எளிமையாக செயல்பட வைக்கிறது. தயிரில் கால்சியம், வைட்டமிங்கள், புரதம், தாதுபொருட்கள் உள்ளதால் இது எலும்புகளுக்கு வலுவளிக்கிறது. தயிர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது, இதயம் சம்மந்தபட்ட நோய்களையும் தடுக்கிறது.
தயிரில் உப்பு:
உப்பில் சோடியம் உள்ளது. அதிகமாக சோடியம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் இரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரக பிரச்சனை, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவை ஏற்ப்படலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உப்பு சேர்த்து சாப்பிடுவதினால் தடுக்கப்படுகிறது, எனவே உணவில் குறைவான உப்பையே பயன்படுத்த வேண்டும்.
தயிரில் சர்க்கரை:
சர்க்கரையில் அதிக அளவில் கலோரிகள் உள்ளது. எனவே சர்க்கரையை சாப்பிடும்போது நீரிழிவு நோய், உடல் பருமன், பற்கள் சொத்தை போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது அதனுடைய ஊட்டச்சத்து குறைகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.
நல்லது எது?
தயிரில் உப்பா சர்க்கரையா என்பது தனிப்பட்ட விருப்பம், ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு தயிரை தனியா சாப்பிடுவது தான் நல்லது. தேவைப்பட்டால் தயிரில் நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.