நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்த்த குஜராத் மாநில தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 1ம் தேதி முதற்கட்ட தேர்தலும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நேற்று பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களிக்க வந்த பிரதமர் மோடியின் வருகைதான் சர்ச்சையாகி உள்ளது.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முதற்கட்டமாக 83 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளிலும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 14,975 பூத்களில் மக்கள் வரிசையாக நின்று வாக்களித்தனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்த இந்த தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள ராணிப் பகுதியில் உள் நிஸ்ஹான் உயர்நிலை பள்ளியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.
அப்போது வாக்களிக்க வரும் வழியில் சுமார் இரண்டரை மணி நேரம் பேரணியாக சென்று வாக்களித்துள்ளார். தேர்தல் நாள் அன்று பிரச்சாரம் செய்யவோ அல்லது வாகு சேகரிக்கும் வகையில் ஈடுபடுவது விதிமீறலாகும். பிரதமர் மோடி அவ்வாறு சென்றது காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. இந்த நிகழ்விற்கு பல தேசிய தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நேற்றுடன் தேர்தல் நிறைவடைந்த நிலையில் வரும் 8ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளும் பல மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகளும் அன்று அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த முறை குஜராத் தேர்தலில் ஆட்சி மாறுமா இல்லை மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தேர்தலின் முடிவுகளே நாடளுமன்ற தேர்தலின் முடிவுகளையும் பிரதிபலிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.