திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
காட்டுமன்னார் பெரியகுளம் கீழக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தொடங்கும் இந்த திருவிழா வைகாசி மாதத்தில் நிறைவடையும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் ஏப்ரல் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே கிருஷ்ணன் பிறப்பு, திரௌபதி பிறப்பு மற்றும் திருக்கல்யாணம் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து பக்தர்கள் சித்ரா பௌர்ணமி அன்று தீச்சட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை தீமிதி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீமிதியில் இறங்கும் அனைத்து பக்தர்களும் 48 நாட்கள் விரதம் இருந்து, நேற்று மாலை தீமிதித்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவை தொடர்ந்து அன்று இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதி உலா சென்றுள்ளார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி