டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – ரஞ்சித் குற்றச்சாட்டு

பாசிச எண்ணத்துடன், சிறுபான்மையினரை ஒடுக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

சிறுபான்மையினரை ஒடுக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லியில் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், பாஜக அரசு பாசிச மனப்போக்குடன் செயல்படுவதாகவும், பொதுசிவில் சட்டத்தை நோக்கி நகர்வதாகவும் இயக்குநர் ரஞ்சித் சந்தேகம் தெரிவித்து பேசினார்.

What do you think?

லஞ்சம் வாங்கிய துணை ஆட்சியர் அதிரடி கைது!

ஈழத்தமிழர் இனப்படுகொலை; ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்! – வைகோ