இயக்குனர் ரவி சங்கர் தற்கொலை..! போலீஸ் விசாரணை..!
எழுத்தாளரான ரவிசங்கர் பாக்யா பத்திரிக்கையில் குதிரை என்ற சிறுகதையை எழுதி தனது பயணத்தை தொடங்கினார்.
அதன் பின்பு இயக்குனர் பாக்யராஜ், விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் முதன்முதலாக கடந்த 2002ஆம் ஆண்டு மனோஜ், குணால் நடிப்பில் வெளிவந்த வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தை இயக்கினார்.
கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் அவருக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது.
அதன்பின் விக்ரமன் இயக்கிய “சூரியவம்சம்” படத்தில் இடம்பெற்ற “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” பாடலை எழுதினார்.
இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படத்திற்கு பாடல் எழுதினார்.
பெரிதாக படவாய்ப்புகள் இல்லாமல் திருமணமும் செய்யாமலும் வாழ்ந்து வந்தார்.
திடிர் தற்கொலை :
இந்தநிலையில், இயக்குநர் ரவி ஷங்கர் சென்னை கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேகே நகர் போலீசார் ரவி சங்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவரின் இந்த திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..