துண்டிக்கப்பட்ட டிவி கேபிள் இணைப்பு..!! நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு..!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது வீட்டிற்கு டிவி கேபிள் இணைப்பு கொடுத்து மாதம் 240 ரூபாய் செலுத்தி வந்துள்ளார்.
சில சேனல்கள் தெரியாததால் கேபிள் உரிமையாளரிடம் கேட்டபோது அவர் வயரை மாற்ற வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
துண்டிக்கப்பட்ட இணைப்பு சரி செய்யப்படாததால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்து முருகேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி சிவகாசி சப்தகிரி கேபிள் விஷன் உரிமையாளர் விவேகன்ராஜ் முருகேசன் வீட்டிற்கு 6 வார காலத்திற்கு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு 5000 ரூபாயும், வழக்கு செலவு தொகை 5000 ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் உத்தர பிரப்பித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..