கர்பப்பை சம்மந்தமான நோய்கள்…!! தீர்வாகும் கொடுக்காய் புளி…!! இப்படி எடுத்து பாருங்க..!!
பழந்தமிழர்களால் பல நோய்களுக்கு மருந்தாக இந்த கொடுக்காய் புளி பயன்படுகிறது. கொடுக்காய் புளி நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதன் இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
கொடுக்காய் புளியில் வைட்டமின் பி1 இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. அது மட்டும் இல்லாமல் மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது . இதில் வைட்டமின் பி2 இருப்பதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. சருமத்தில் ஏற்படும் பல வகையான பாதிப்புகளுக்கும் கொடுக்காப்புளி சிறந்த தீர்வாக உள்ளது.
இதில் வைட்டமின் சி இருப்பதால் முகத்தில் ஏற்படும் முதுமை தோற்றத்தை குறைக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் முகப்பொலிவு கிடைக்கும். இந்த பழம் ஆப்பிளுக்கு இணையான பலமாக இருக்கிறது.
இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இதனால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட இந்த கொடுக்காய் புளி உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவை சேர்க்கிறது.
பற்களில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சர் பயிற்று போக்கு வாய் புண், மலச்சிக்கல், செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த காய் சிறந்த தீர்வா இருக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மேலும் நீண்ட நேரம் பசி ஏற்படாத உணர்வை கொடுத்து உட்கொள்ளும் கலோரி அளவு குறைகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் ரத்த உரையை தடுக்கும் உதவி செய்கிறது.
கொடுக்காப்புளியை தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் வாத நோய் ஏற்படாது. பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை சம்பந்தமான நோய்கள் உடல் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி நல்ல மருந்து.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..