டேஸ்டான மோத்திசூர் லட்டு செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
பாகு தயாரிக்க:
சர்க்கரை 1 3/4 கப்
தண்ணீர் 1 கப்
ஏலக்காய்த்தூள் சிறிது
எலுமிச்சை சாறு சிறிது
பூந்தி தயாரிக்க:
கலர் பவுடர் சிறிது
கடலை மாவு 2 கப்
உப்பு சிட்டிகை
தண்ணீர் 1 1/2 கப்
சோடா உப்பு சிட்டிகை
முந்திரி 10
நெய் 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஃபேனில் சர்க்கரை முக்கால் கப் சேர்த்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து பின் ஏலக்காய்த்தூள், எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து விட்டு இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,கலர் பவுடர், உப்பு, சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக ஊற்றி பொரித்துக் கொள்ளவும்.
பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
அதில் சர்க்கரை பாகை சேர்த்து நன்றாக கலந்து விட்டு நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் நெய் சேர்த்து கலந்து லட்டு வடிவில் பிடித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் செம்ம டேஸ்டான மோத்திசூர் லட்டு தயார்.