மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஓலா, உபர் போன்ற ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேபிடோ நிறுவனத்தின் பைக் டாக்ஸி சேவை சாமானியர்களுக்கு வசதியாக இருந்தாலும், முறையான அனுமதி இல்லாத பைக்குகளும் இந்த சேவையில் இணைந்துள்ளதாக புகார்கள் எழுந்து வந்தது.
இதனையடுத்து மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 2000 பைக்குகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 பைக்குகளை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்; ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.