பள்ளி மாணவனுக்கு கல்வி உதவி அளித்த மாவட்ட ஆட்சியர்..!! குவியும் பாராட்டு..!!
பென்னாகரம் அருகே குடும்ப வறுமையை போக்க காலையில் இரண்டு மணி நேரம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தேநீர் விற்பனை செய்து விட்டு பள்ளிக்குச் செல்லும் சிறுவன்-வீட்டு செலவிற்காக மாதந்தோறும் உதவி செய்ய முன்வந்த அறக்கட்டளை-வீடு வழங்குவதாக ஆட்சியர் உறுதி.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சார்ந்த சையத் பாஷா-வாஹிரா தம்பதியினருக்கு அப்சர், மிஸ்பா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர், இதில் அப்சர் 10-ம் வகுப்பு படித்து வருகிறான் மிஸ்பா எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சையத் பாஷா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை பராமரிப்பதற்காக ஆள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் வாஹிரா எந்த வேலைக்கும் செல்லாமல், தன் கணவனை பராமரித்து வருகிறார். இதனால் குடும்பத்திற்கு போதிய வருவாய் இல்லாத நிலை இருந்து வருகிறது. மேலும் சொந்தமாக வீடு இல்லாததால், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு வாடகை, மருத்துவ செலவு, மளிகை என மாதந்தோறும் 6000 முதல் 7000 வரை செலவாகிறது. சையத் பாஷாவிற்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை கிடைத்து வருகிறது. ஆனாலும் அது போதியதாக இல்லை.
இதனால் சிறுவன் அப்சர் தினம் தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தேநீர் தயார் செய்து கொண்டு, ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்று, பள்ளிக்கு செல்வதற்குள்ளாக காலை 6:00 மணி முதல் எட்டு மணிக்குள் விற்பனை செய்துவிட்டு பள்ளிக்கு செல்கிறான். அதில் கிடைக்கும் வருவாயை வைத்து காலம் கழித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் காலை 6 மணி முதல் எட்டு மணி வரை தேநீர் விற்பதைக் கண்ட சிலர் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இதனைக் கண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் அறக்கட்டளை சார்ந்த சிறுவனது குடும்ப செலவிற்கு தேவையான உதவி செய்வதாகவும், படிக்கின்ற வயதில் இது போன்று தேனீர் விற்பனை செய்யக்கூடாது. மேலும் குடும்பத்தின் வறுமை பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக மாதந்தோறும் 7500 உதவி செய்வதற்காக முன் வந்தனர். மேலும் இந்த உதவித்தொகையினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலமாக சிறுவனுக்கு கொடுக்க அறக்கட்டளையினர் வந்திருந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சிறுவனை அழைத்து உதவி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் சொந்த வீடு இல்லை என சிறுவன் தெரிவித்தவுடன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தினை மாவட்ட ஆட்சியரின் சார்பில் 50 சதவீதம் செலுத்துவதாகவும், அறக்கட்டளையினரிடம் மீதமுள்ள 50 சதவீத தொகையை செலுத்தினால் உடனடியாக வீடு ஒதுக்கு தருவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து அறக்கட்டளையினரும் 50 சதவீத பணத்தை கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து உடனடியாக சிறுவன் அப்சரின் குடும்பத்திற்கு வீடு வழங்குவதாக உறுதி அளித்து சிறுவனையும் சிறுவனுக்கு உதவி செய்த அறக்கட்டளையினரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பாராட்டி வாழ்த்தி தெரிவித்தார். மேலும் பள்ளிக்குச் சென்று நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும். இனி தேநீர் விற்பனை செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..