மாணவி ஒருவர் கராத்தேவில் செய்முறை விளக்கம் அளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது – மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கராத்தேவில் செய்முறை விளக்கம் அளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் 107 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் 107வது ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகள், இலக்கியமன்ற நிறைவு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது .
அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மாணவி அட்சயா எரிந்து கொண்டிருந்த ஓடுகளை உடைத்தும், காலால் ஓடுகளை உடைத்தும் கராத்தேவில் செய்முறை விளக்கம் அளித்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து மாணவிகளின் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.