தீபாவளி ஆப்பர் இனி சொந்த ஊருக்கு ஜாலியா போங்க..!!
தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளில் 5 சதவித கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், புதிய கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு 25 சதவித மற்றும் இந்த ஆண்டு 5 சதவித என இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச தொகையைவிட அதிகம் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை-நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் 2 ஆயிரத்து 211 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 765 ரூபாய் என்றும், சென்னை-நெல்லை குறைந்தபட்ச கட்டணம் ஆயிரத்து 960 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 268 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை – மதுரை குறைந்தபட்ச கட்டணம் ஆயிரத்து 363 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் ஆயிரத்து 895 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சென்னை சேலம் இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ஆயிரத்து 363 ரூபாயும், அதிகபட்ச கட்டண. ஆயிரட்து 895 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..