தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் !

ஈரோடு மாவட்டம் : தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகம்   உட்பட 17 மாநிலத்தில் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  புஞ்சை புளியம்பட்டியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், வரும் 2021ம்  ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையே இருப்பதாக தெரிவித்தார்.

தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் !

ரஜினியுடனான கூட்டனி குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும் பார்க்கலாம் என்றார்.  மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தியதாகவும், தங்களுக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மறைந்த  முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவை கடுமையாக விமர்சித்த தேமுதிக, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  அவர்களுடன் கூட்டணி  அமைத்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள் – பிரதமர் நரேந்திர மோடி

ரஜினி எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே? – எம்.பி டாக்டர்.செந்தில்குமார் கேள்வி !