‘திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்?’ 29ம் தேதி பொதுக்குழு கூட்டம்!

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள தேதியை திமுக அறிவித்துள்ளது.

மூத்த அரசியலை தலைவரும், திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் கடந்த மார்ச் 7ம் தேதி காலமானார். இந்த நிலையில், திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பதை தேர்வு செய்யும் திமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அப்போது திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

‘மாஸ்டரில் இணைந்த யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை கடும் சரிவு!