திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச்செயலாளரும் பேராசிரியர் க.அன்பழகன் இன்று காலமானார்.

98 வயதான க.அன்பழகன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் உயிர்பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அன்பழகனின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

What do you think?

புதிதாக 10 மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டம் – மெட்ரோ நிர்வாகம்

‘கொரோனா குறித்த விழிப்புணர்வு’ புதிய யுக்தியை கையிலெடுத்த மத்திய அரசு!