பள்ளம் தோண்டுனோமா, பாதியிலேயே விட்டோமானு” இருக்க மாட்டோம்..! பதிலடி கொடுத்த திமுக அமைச்சர் நேரு..!
அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் முழுவதும் பெய்ய கூடிய மழை தமிழகம் முழுவதும் பெய்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ சென்னை மக்கள் தான்.., வடிகால் நீர் குறைவாக இருப்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி சாலைகளிலும்.., தாழ்வான பகுதியில் உள்ள மக்களின் வீடுகளிலும் நிரம்பி விடுகிறது, இதை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு புதிய “வடிகால் அமைக்கும் திட்டம்” கொண்டு வந்து தற்போது அதற்கான பணிகளும் வெகு விரைவாக செயல்பட்டு வருகிறது.
நடைபாதை வளாகம் அமைக்கும் பணி தொடங்குவதற்காக “நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு” அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக மழை பெய்து சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது, இது பற்றி என்ன நடவடிக்கை நீங்கள் மேற்கொள்ள போறீங்க..? என பத்திரிகையாளர் கேட்க.
இது எங்க டைம்.., இந்த முறை அது மாதிரி எல்லாம் நடக்காது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கலாம் செய்தவர்கள் யார், மழை நீர் தேங்கியும் பார்வையிட வராமல் இருபவர்கள் யார் என மக்களுக்கு தெரியும்.
இந்த முறை மழையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக “புதிய வடிகால் நீர்” அமைக்கும் திட்டம் சென்னை முழுவதும் நடைபெற்று வருகிறது, அதற்கான பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நீங்க நினைக்குறா மாதிரி “பள்ளம் தோண்டுனோமா, பாதியிலேயே விட்டோமானு” இருக்க மாட்டோம். இன்னும் சில மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப் படும் என அமைச்சர் நேரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..