ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?” என திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்தது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அழைப்பிதழ்கள் எப்போதும் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ அல்லது ‘இந்திய பிரதமர்’ என்று தான் அச்சிடப்படும். இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார். தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும் போது பல கேள்விகள் எழுகிறது. ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
In a rather unprecedented move, an official invite from the President of India reads 'President of Bharat' instead of India.
Makes us wonder what could be the possible politics or intention behind this action.
Then we also read that the change has come after the RSS Chief has… pic.twitter.com/Odo2hhWMOI
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 5, 2023