ஊழல் பட்டியல் விவகாரத்தில் நிச்சயமாக நானும் வழக்குத் தொடர்வேன் அதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் என திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஊழல் பட்டியல் விவகாரம் குறித்த கேள்விக்கு: திமுக ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ஸ்டெர்லைட் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொடர்ந்து திமுக அரசு ஸ்டெர்லைட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. மக்களுடைய குரலை எதிரொலிக்கிறது, நிச்சயமாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.