மோசடி புகார் – செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்

அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில் பாலாஜி, 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்காக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள். அப்போது, வழக்கை மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ரமேஷ், அன்றைய தேதியில் 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

What do you think?

GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்

ஐஐடி பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த பேராசிரியர்; அதிர்ச்சியில் மாணவிகள்