சட்டப்பேரவை கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு பல முறை வலியுறுத்தியிருந்தார். இதனை தமிழக அரசு பரிசீலிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொறடா சக்கரபாணி, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார். அதேபோல், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

What do you think?

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி!!!

Breaking – கடுமையான ஊரடங்கு; மீறுபவர்களுக்கு சிறை!!!