திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு..! தலைவர் விஜய் சொன்ன கருத்து..! வாயை திறக்காத அண்ணாமலை..!
சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறியுள்ள மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக அரசின் ஆணைப்படி தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணை ஏற்று திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
இதில் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..
மேலும் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் நாகநாதன், திராவிடர் கழக துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தோழமை மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்..
நடிகர் விஜய் நீட் விலக்கு கருத்து :
எப்படி மோடி என்பவர் ஒரு காற்று ஊதப்பட்ட பலூன், உண்மை என்கிற ஒரு குண்டூசி போதும் அந்த மோடி என்கிற மிகப்பெரிய பலூனை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சு முருகன் பேசியது
இன்று கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் நீட் விலக்கிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது திமுக மாணவர் அணியின் போராட்டத்திற்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது என்றார்..
நீட் தேர்வை இன்று நேற்று அல்ல எப்போது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து எதிர்க்கிற இயக்கம் திமுக.. கலைஞர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் நுழையவில்லை, அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரையும் நீட் தேர்வு நுழையவில்லை, கையால் ஆகாத ஆட்சி இடையில் இருந்ததால் நீட் தேர்வு நுழைந்துவிட்டது..
தமிழகத்தில் கடந்த கையாளாத ஆட்சி இருந்ததால் நீட் தமிழகத்தில் நுழைந்து விட்டது இன்றும் கோடாலி வைத்து வெட்ட வேண்டிய நிலைமையில் நாம் தள்ளுகிறோம். நீட் தேர்வு ஒரு காலத்தில் இங்கே இருக்கின்ற பாஜக எல்லாம் திமுகவிற்கு இதுவே வேலை என தெரிவித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழக முதல்வர் அன்றே கடுமையாக எதிர்த்தார்..
திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு அல்ல வந்தபோதே எதிர்த்தோம் . திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா நடவடிக்கையும் எடுப்போம்.
ராகுல் காந்தி நீட் எதிர்ப்பு :
இன்றைக்கு மீண்டும் ஒன்றிய ஆட்சியில் ஏற்பாட்டாலும் ஏற்படாவிட்டாலும் திமுகவுடைய குரலை கேட்க வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசு வந்துவிட்டது. ராகுல் காந்தி இந்த நீட் தேர்வை கையில் எடுத்துக் கொண்டது நாம் மனமார பாராட்டுகிறேன்…
நீட் தேர்வு வருவதன் நோக்கமே நம்மை அழிக்க தான், நீட் தேர்வு ஒழுங்கா நடந்ததா, உலக மகா பிராடு தனம் நீட் தேர்வில் தான் நடத்து உள்ளது… ஒரு நல்ல காலம் திரும்பிக் கொண்டிருக்கிறது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்…
யாராக இருந்தாலும் இந்த இயக்கத்தோடு போராட வேண்டும் என்கின்ற நிர்பந்தம் வந்துள்ளது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது, நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் ஆக இருந்தாலும் இதை ஆதரிக்கின்றனர்.
மக்களுக்கான ஆதரவு யார் கொடுத்தாலும் அது வரவேற்பவர் தான் தமிழக முதலமைச்சர். சனாதனத்தை உதயநிதி ஸ்டாலின் பேசிய பிறகுதான் ராகுல் காந்தி பேசியுள்ளார், நீட் தேர்வை உதயநிதி கையில் எடுத்துள்ளார், வெற்றி விழாவை இந்த இடத்தில் நாம் உதயநிதி ஸ்டாலினுக்கு நடத்துவோம் என்றார்..
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி. இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அகில இந்திய இசுவாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பிய நேரத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சபாநாயகர் கூறினார்..
ஆனால் நேற்று தினம் பாராளுமன்றத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயந்து கொண்டு தான் ஓடிவிட்டார் நிச்சயமாக எங்களை போன்றவர்களுக்கு கருதத்தோன்றுகிறது…
உச்சநீதிமன்றம் இந்த மோசடி ஊழலை பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு என்று அனைவரும் இன்று உணர ஆரம்பித்து விட்டனர்..
ஒரு காலத்தில் திமுக மட்டும் பேசிக் கொண்டிருந்தது இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகிறது, இன்று காலையில் தாமாக முன்வந்து நடிகர் விஜய் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது, அகில இந்திய அளவில் இந்த இஷ்யூ பரவலாகி உள்ளது, நல்ல முடிவு வரும் பாராளுமன்றம் தற்போது வேறு மாதிரி உள்ளது. நிச்சயமாக நல்ல முடிவு வரும்.
ஒரு அரசாங்கமே நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது, கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விஜயின் கருத்து வரவேற்கத்தக்கது.
167 கோடி சுங்கச்சாவடியில் சிக்கி உள்ளது தொடர்பு உள்ளதாக மோடி படம் வந்திருக்கிறது நிர்மலா சீதாராமன் அண்ணாமலையின் படம் வந்துள்ளது, எடப்பாடி படமும் வந்துள்ளது. ஒரே ஒரு சாராய வியாபாரியுடன் போட்டோ இருந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த அண்ணாமலை தற்போது ஏன் வாய் திறக்கமா இருக்கிறார்…
அப்போது நான் சொல்லட்டுமா மோடிக்கும் 167 கோடிக்கும் தொடர்பு உள்ளது என்று. போலி சாமியாரை பார்ப்பதற்காக இன்று 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அண்ணாமலையை 167 கோடிக்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு நான் என்பதில் சொல்கிறேன் என்று கூறினார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..