குழந்தைகள் பராமரிப்பு..!
குழந்தைகளுக்கு நோய் அண்டாமல் இருக்க வசம்பு இலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர நோய் வராது, சருமமும் அழகு பெறும்.
குழந்தைகளுக்கு குடல் பூச்சி அழிக்க மாங்கொட்டை பருப்பினை காயவைத்து பொடித்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்க குடல் பூச்சிகள் அழியும்.
குழந்தைகளின் ஒரு வயதிற்கு முன் முட்டை வெள்ளை கரு மற்றும் பசும்பால் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் அனைத்து வகையான உணவு பொருட்களையும் சாப்பிட கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது அவர்களே சாப்பிடும்படி தட்டில் வைத்து அவர்களை சாப்பிடும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும்.
வெயில் காலத்தில் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதை தவிர்த்து விட்டு தரையில் ஒரு பாயை விரித்து அதில் பருத்தியால் ஆன புடவைகளை அடர்த்தியாக மடித்துபோட்டு அதில் குழந்தைகளை படுக்க வைக்கலாம்.
குழந்தைகள் படுக்கும் இடத்தில் ஒன்றன் மேல் ஒன்று என அடுக்கி வைக்கும் பொருட்கள் எதுவும் வைக்க கூடாது.