வெள்ளிக்கிழமை இதை செய்து பாருங்க இறைவனின் அருள் கட்டாயம் கிடைக்கும்..!!
பாரம்பரியமாக வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டு வருகிறோம். வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிப்படுவது.., பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக மட்டுமல்ல.. தரித்திரத்தை விரட்டு வதற்காகவும் தான்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து விட்டு பின்னர், தண்ணீர் வைத்து துடைக்க வேண்டும். பின் வீடு முழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
பின் விளக்கு சாமான்களை துளக்கி, மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை அறையில் உள்ள சாமி படங்கள் மற்றும் விளக்குகளுக்கு பூக்கள் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
அதற்கு முன் வாசலின் இருபுறங்களிலும் எலும்பிச்சை பழத்தை வெட்டி அதில் குங்குமம் இட்டு வாசலின் இரு புறத்திலும் வைக்க வேண்டும். முடிந்தால் வாசலின் மேற்புறத்தில் வேப்பிலையில் மாலை கட்டலாம்
வாசலில் கூட அகல் விளக்கு ஏற்றி வைக்கலாம். வீடு முழுவதும் மணக்கும் அளவிற்கு சாம்பிராணி புகை போட்டு , தீப ஆராதனை செய்து வழிபட்டால் வீட்டில் லக்ஷ்மிகடாச்சம் பெருகும். வீட்டில் என்றும் மன நிம்மதியும் இருக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..