பெண்களின் அடிவயிற்று கொழுப்பு கரையணுமா..?அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
இந்த காலகட்டத்தில், பெண்களுக்கும்.., ஆண்களுக்கும் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுள் ஒன்று.., தொப்பை.
இது அவர்களின் உடல் அழகு மற்றும் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆண்களுக்கு தொப்பையானது மிக பெரியதாக இருக்கும்.
பெண்களுக்கு அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதால் சிறிய அளவில் தொப்பை உண்டாகும்… முக்கியமாக, குழந்தை பிறந்த பிறகு,இந்த பிரச்சனை பெண்களுக்கு ஏற்படுகிறது .
ஆனால் பெண்கள் விரும்புவதோ கட்டுக்கோப்பாக இருக்கும் உடல் தான். மெலிந்த உடல் போன்று, சிக்கென்று அழகாக இருக்க வேண்டுமானால் இதை ட்ரை பண்ணுங்க .
1. குழந்தை பெற்ற பெண்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் .
குழந்தைக்கு வேண்டிய பாலை உற்பத்தி செய்ய அதிகமான கலோரிகள் உடலில் இருந்துவெளியேறும் .
இதனால் அதிகரித்த உடல் எடையை எளிதில் குறையும். எடை குறைய மிகச்சிறத்த வழி தாய்ப்பால் கொடுப்பது தான் என்று ஆய்வுகளும், நிபுணர்களும் கூறுகின்றனர்..
2. மாலை நேரத்தில் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை உண்பதற்கு பதிலாக, ஆப்பிளை உட்கொண்டு வந்தால், அது மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு, ஏராளமான நண்மைகள் கிடைக்கும்.., தொப்பையும் கரையும்.
3. நம் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருத்தல் அவசியம். தொப்பையைக் குறைக்க , தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக அளவில் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதனால் கொழுப்புக்கள் குறையும். தினமும் அதிக அளவு நீரைக் குடிக்க பழகி கொள்ள வேண்டும் .
4. அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறி சுரைக்காய் ஜூஸ் குடித்துவர கொழுப்புக்கள் குறையும் .சுரைக்காயை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, தினமும் குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைந்து, விரைவில் சாதாரண வயிற்றைப் பெறலாம்.
5. பட்டை நீர் பட்டை உடல் கொழுப்பைக் கரைக்கும் அற்புதமான பொருளாகும். அந்த பட்டைத் தூளை 1/2 டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து,
6. டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வடிகட்டி, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி காலை எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் நற்பலனைக் காணலாம்.
7. பிரசவத்திற்கு பிறகு கட்டுக்கோப்பான உடலைப் பெற உதவும் ஒரு உணவுப் பொருள் தக்காளி. தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன், கொழுப்பை குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
இதனால் தினமும் உணவில் தக்காளியை சேர்த்துகொள்வது நல்லதாகும்.
7. உடல் தொப்பையை குறைக்க தவறான வழிகளை தேர்ந்தெடுத்து பக்க விளைவுகளை, ஏற்படுத்தி கொள்ளாமல் இயற்கையான உணவு முறைகளை உட்கொண்டு நோயில்லாமல் வாழ்வதே சிறந்தது ஆகும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..