உங்களுக்கும் பொடுகு பிரச்சனை இருக்கா..? அப்போ இது உங்களுக்காக…!!
தேன் :
எலுமிச்சையில் பொடுகை விரட்டும் பண்புகள் அதிகம் உள்ளது. இது பொடுகை எளிதில் போக்கும். இரண்டு அல்லது மூன்று சிட்டிகை தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலையின் உச்சத்தில் மாஸ்க் போன்று அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு குறையும். இதை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மாதத்திற்கு 5 முறை செய்தால் சிறந்த பலன் அளிக்கும்.
தேங்காய் எண்ணெய் :
வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு சேர்த்து தலையின் உச்சத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அதன்பிறகு ஷாம்பூ கொண்டு குளிக்க வேண்டும். இது பொடுகை போக்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தயிர் :
பொடுகை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது தயிர். தயிருடன் எலுமிச்சை சாற்றை கலந்து உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு தலையை அலச வேண்டும். குளிர்காலங்களில் மிதமான அளவே சூடாக இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..