சித்தாந்தத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா..?
இந்து மதத்தின் கொள்கைகளை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இங்கே இஸ்லாமிய அடிப்படை சித்தாந்தத்தின் மூலம் அந்த கொள்கையை பின்பற்றி தான் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனரா என்கிற கேள்விக்கு எந்தவொரு தெளிவான பதிலும் பெரும்பாலான முஸ்லிம்களிடம் இல்லை.
கிறிஸ்தவம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகள் வெவ்வேறானவை இஸ்லாம் இந்த இரண்டு கொள்கைகளையும் தாண்டி மூன்றாம் நிலையை உலகிற்கு எடுத்துக் கூறுகிறது.
அத்வைத கொள்கைப்படி படைப்பின் எல்லா பொருட்களிலும் இறைவன் இருக்கிறான் (இந்து அடிப்படை) பிதா… மகன்… பரிசுத்த ஆவி இந்து மூன்று படித்தர நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்..
கடவுள் மனித ரூபத்தில் இந்த உலகில் தோன்றி, மனிதனின் பாவங்களை கழுவ அவர் இரத்த சடுதியுனுடே சிலுவையில் முழுமையாக தன்னை ஒப்பு கொடுத்தார்…( கிறிஸ்தவம் )
மூன்றாவதாக இஸ்லாம் தனது அடிப்படையான கருத்தை கலிமா என்கிற நாவின் மொழிதல் மூலம் உறுதிப்படுத்தினாலும் செயல்பாட்டில் உறுதியாக இருக்க வலியுறுத்துகிறது.
“ஏக தத்துவம்” என்பதே இஸ்லாமிய நம்பிக்கையின் ஆழமான கருப் பொருளாகும். அதாவது “ஏகன்” எந்தவொரு நிலையிலும் அநேகனாக மாறி விட மாட்டான். பரம் பொருளாகிய அந்த ஏகனுக்கு ஆதியும் இல்லை…. முடிவும் இல்லை.
அத்வைதத்தை முழுமையாக மறுக்கும் இஸ்லாம், திரித்துவத்தை முழுமையாக நிராகரித்து விடுகிறது. ஆனால், மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என்பதை மிகுந்த கவனத்துடன் வலிமையான முறையில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அதாவது, பிறப்பால் அனைவரும் சமம் என்பதை இஸ்லாம் தெளிவாக எடுத்து கூறுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படை கட்டமைப்பை இதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இன்றைய முஸ்லிம் களில் பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய அடிப்படையிலான ஏக தத்துவத்தை வாயால் மொழிந்த நிலையில் நடைமுறையில் மாறுபட்ட கடவுள் கொள்கையை தன்னுள் ஆழமாக பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதே உண்மையாகும்.
இஸ்லாமிய சமூகத்தில் மிகப்பெரிய அறிஞர்களாக அறியப்பட்ட பலரும் இஸ்லாமிய அடிப்படையிலான நம்பிக்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இவர்களின் நம்பிக்கை மற்றும் செயல்பாடுகள் ஏதோ புதிய மதம் என்பதை போல் நம்மால் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகி விடுகிறது.
குறிப்பாக இவர்களின் புதைகுழி வழிபாடு குர்ஆனில் எங்குமே காணமுடியாத ஒன்றாகவே நமக்கு புரிகிறது. குறிப்பாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒரு நபரின் சமாதியில் இஸ்லாமிய மக்கள் பெருந்திரளான முறையில் கூடி வழிபாடு செய்வதை நாம் காண முடிகிறது.
இறந்து போன கல்லறை தோட்டங்களை வணங்கும் முறைக்கு ஆதாரம் இருப்பது போன்றதொரு மாய பிம்பம் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
இந்த மாய போலியான கட்டமைப்பின் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கல்லா கட்டப்படுகிறது.
சிலை வழிபாட்டை எதிர்ப்பதாக கூறும் இஸ்லாமிய அறிஞர்களின் தவறான வழிகாட்டல் தான் புதை குழி வணக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இது எந்தவொரு நிலையிலும் மேன்மையான ஒன்றாக இல்லை.
ஒரு மனிதன் இறந்து போன நிலையில் சில பல ஆண்டுகளுக்கு பிறகு அவனது கல்லறையை தோன்றி பார்த்தால் அது முழுமையாக எலும்புக் கூடாக காட்சி தரும் என்பதே உண்மை.
இன்னும் சில ஆண்டுகள் கழிந்த பின்னால் எலும்புகள் அனைத்தும் மக்கி போன நிலையில் எதுவுமே இல்லாத நிலையில் சிலை வழிபாட்டை குறை கூற இவர்களுக்கு எந்தவொரு நிலையிலும் உரிமை இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.
இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை ஏக இறைவன் என்பதே உண்மை. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்களிடம் இது போன்ற நிலை காணப்படவில்லை. மாறாக இந்த மக்கள் இஸ்லாம்… இந்து.. கிறிஸ்தவம் அல்லாமல் புதிய நம்பிககையிலான இறையியல் கொள்கையை பின்பற்றி வருவதாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே யதார்த்தமான உண்மையாகும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..