இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா..? அப்போ இதை பண்ணுங்க போதும்..!
இந்த பிரச்சனையை வாழ்க்கையில சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.. அதுவும் நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும் நபர்களும் அதிகம்.. இதற்கு நேர் மாறாக தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு அதிகம் என சொல்லலாம்.. தூங்குவது தப்பில்லை, ஆனால் வேலை நேரத்தில் தூங்கினால்..? தவறு தானே..
அப்படி வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் என்ன என்று இதில் படிக்கலாம்..
வேலை நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டதும் ஒரு தூக்கம் வருமே அது சொர்க்கம், ஆனா அப்படி வரும் அந்த சொர்க்கத்தை நாம்ப கட்டுப்படுத்திதான் ஆகணும்.. அதேபோல் மீட்டிங் நேரத்தில் மீட்டிங்கில் நடப்பதை கவனிப்பவர்களை விட தூக்கத்தை கட்டுப்படுத்துவர்களே அதிகம்..
ஒரு சில நேரம் நம்மை அறியாமல் தூங்கி விடுவோம் அதுவும் இயல்பு தான். அந்த சமயத்தில் வரும் தூக்கத்தைக் கட்டுப்படுத்த தான் நினைப்போம்., அப்படி வரும் வந்த தூக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் என்னவென்று இதில் பார்க்கலாம்..
தினமும் காலையில் அலுவலகம் வருவதற்கு முன்னர் தியானம் செய்ய வேண்டும். ஆனால் இதனை பெரும்பாலனோர் செய்வதில்லை. தியானம் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும்,வேலையின் மீதான கவனமின்மையைத் தடுக்கவும் உதவும்.
அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், எண்ணெய் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம், தீர்வுகள் எளிமையானது தான் , ஆனால் நாம் அதை செய்வதில்லை.
வேலைக்கு கிளம்பும் அவசரத்திலோ அல்லது வேலைக்கு வந்த பின்னரோ டீ டைமில் கிடைத்த உணவை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம்..
தினமும் எட்டு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டுமாம். அதையாவது நாம் செய்கிறோமா..? அப்போதான் வாட்ஸ் ஆப்., பேஸ் புக்., இன்ஸ்ட்டா., யூடியூப் இதுல எல்லா போக தோணும்.. அப்படி இரவு நேரத்தில் அதை பயன் படுத்துவதால் தூக்கம் கட்டுப்படுவதோடு.. கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கிறது..
இதனால் இரவில் தூக்கம் வராமல், வேலை நேரத்தில் தூங்குகிறோம்..
இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரமாக எழுந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. இதனால் ரத்த ஓட்டம் சீராகி தூக்கப் பிரச்னைகள் குறையும்.
வேலை நேரத்தில் தூக்கம் வந்தால், உடனே எழுந்து நடக்கத் தொடங்குங்கள்.
மாடிப்படிகளில் ஏறி இறங்க வேண்டும்.,
சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்..,
அல்லது தூக்கம் வரும் பொழுது டீ, காபி குடிக்கலாம்..
நைட் ஷிப்ட் வேலை செல்பவர்கள்.., வேலைக்கு செல்லும் முன் அதிகம் சாப்பிடுவதை கட்டு படுத்திக்கொள்ள வேண்டும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..