உங்களுக்கும் இரட்டை குழந்தையா..? அப்போ இந்த முறை பராமரிப்பு அவசியம்..!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது . இப்படி இருக்கும் சமயத்தில் இரண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகுந்த கடினமான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் .
இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பால் கொடுப்பது என்பது சுலபம் கிடையாது என்கிகின்றனர் மருத்துவர்கள்.
இரட்டை குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டியவை .
1. போதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. தாய்ப்பாலூட்டும் போது பெண்கள் சரியாக அமராவிட்டால், முதுகு வலி, உடல் வலி, மார்பகவலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு ஆளாக வேண்டியிருக்கும்… இது அதிக சோர்வையும் உண்டாக்கும்.
3. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் நிலை மற்றும் இணைப்பு சமமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு நிரம்பினால் மட்டுமே எடையும் கூடும் .
4. நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் இரட்டை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்..
5. வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது, தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் .
6. தாய்ப்பாலூட்டுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடனே குழந்தைகள் நல நிபுணரின் உதவியை நாடுவது நல்லதாகும் .அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற்று கொள்வது சிறந்ததாகும்.
7. வேளைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமித்து வைக்க கற்றுகொள்ள வேண்டும்…
8. நன்கு சமைத்த உணவுகளை உட்கொள்ளவேண்டும்.பாலூட்டும் தாய்மார்கள் ஐந்து வேலை கூட சாப்பிடலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..