மாதுளை பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?
நாம் தினசரி உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் மாதுளை பழம் என்பது மேலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தர வல்லது.
மாதுளை பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் , உடலில் இரத்தம் அதிகரிக்கும். ஆனால் அதையே தினசரி உட்கொள்ள கூடாது என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக சிகப்பு நிற பழங்கள் உடலுக்கும் இதயத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் மாதுளையின் சிகப்பு நிறம் தனித்துவம் கொண்டது. அதில் விட்டமின்கள் ஏ சி மற்றும் இ நிறைந்திருக்கும். அவற்றின் நன்மைகளை பார்க்கலாம் ……..
1. மாதுளை பழத்தில் பிளவர் நாயுடுகள் உள்ளடக்கம் இருப்பதால் எலும்பு அடர்த்தி இழப்பை தடுக்க இது உதவுகிறது .உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராடும் சக்தி கொண்டது .
2. மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது .இது செரிமானத்திற்கு நன்மை அளிக்கும். மாதுளை பழம் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி ஆகும் .
3. மாதுளை பழம் புற்றுநோய் தடுப்பிற்கு நல்ல மருந்தாக அமையும்.
4 . மாதுளை சரியாக உண்பதன் மூலம் உடலில் ஏராளமான நன்மைகளை பெற முடியும்
5. ஒரே நேரத்தில் அதிக பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால், பெரும் அளவு பாதிப்புகளை தவிர்க்கலாம். இதனால் ரத்த ஓட்டத்திற்கு மாதுளை என்பது சிறந்த மருந்தாகும்.
மாதுளை உண்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை பெறுவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேவையான அளவு உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் .
காலநிலைக்கு ஏற்றவாறு மாதுளை உட்கொள்வது நல்லது. பெரும்பாலும் குளிர் காலத்தில் சிறிது அளவு தவிர்க்கலாம். கோடை காலத்தில் அதிகமாக உட்கொள்ளலாம் .இவற்றை பழச்சாறாகவும், பழமாகவும் சாப்பிடலாம்.
இவ்வாறு ஏராளமான நன்மைகள் மாதுளையில் அடங்கியுள்ளதால் நாம் அதனை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை கூட எடுத்துக் கொள்ளலாம்.
நம் உடலை நாம் இது போன்ற விஷயங்களை செய்து பாதுகாத்தாலே மருத்துவமனைக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஆரோக்கியமுடன் வாழலாம்.