உலக ரத்த தானம் தினம் என்று தெரியுமா..? தெரிவோம் அறிவோம் – 14
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லுவார்கள்.., அன்னதானம் எந்த அளவிற்கு ஒருவரின் பசியை போக்குகிறதோ அதே அளவிற்கு ரத்த தானமும் முக்கியம். ரத்த தானம் கொடுப்பதால் ஒருவரின் உயிர் காப்பாற்றப் படுகிறது.
ஒருவரின் உயிரை காப்பாற்றும் ரத்த தானத்திற்கு தனி ஒரு தினம் இல்லை என்றால் எப்படி..?
ஒரு சிலருக்கு ரத்த தானத்தின் மகிமை பற்றி அறிந்துகொள்ள மறுக்கிறார்கள். ரத்த தானத்தின் அவசியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ரத்த தான தினம் கொண்டாடப் படுகிறது.
இந்த ஆண்டு சில கருத்துக்களையும் உலக சுகாதார நிறுவனம் பகிர்ந்துள்ளது. ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், அடிக்கடி உதவுங்கள். என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
எந்த உடல் அமைப்பினர் ரத்த தானம் செய்யலாம் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். நல்ல உடல்நிலை உள்ள 18 – 65 வயது வரை இருக்கும் எவரேனும் ரத்தம் கொடுக்கலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ விற்கு மேல் இருக்க வேண்டும்.
ரத்த தானம் செய்வதற்கு முன் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரிசிசோதித்துக் கொண்ட பின்னரே ரத்தம் கொடுக்க வேண்டும்.
உடல் எடை மற்றும் அனைத்து பரிசோதனை களும், பரிசோதிக்கப் பட்ட பின்னரே 350 மிலி மட்டுமே ரத்த தானத்திற்கு என்று எடுத்துக்கொள்ளப் படும்.
ரத்த தானம் கொடுப்பதும் நம் உடலுக்கும் நல்லது.., ஜூன் 14ல் மட்டும் தான் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று அல்ல.., அனைத்து நாள்களிலும் ரத்தம் கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..