உலக காற்றுதினம் என்று தெரியுமா..? தெரிவோம் அறிவோம் -5
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவு, தண்ணீர் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு காற்றும் அவசியம்.., இவை மூன்றும் இல்லாமல் உலகில் யாராலும் உயிர் வாழ முடியாது.
ஒரு சில உணவு எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறியதோ அதே அளவிற்கு, காற்றும் நாளுக்கு நாள் மாறி கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று, வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று போன்றவற்றால் மாசு காற்றாக மாறிவிடுகிறது.
இந்த மாசு காற்றால் மட்டும் இதுவரை 70 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். காற்று மாசுபடுவதை நினைத்தால், அதை தடுக்கலாம் ஆனால் பலரும் அதை செய்வதில்லை. வருடத்தில் ஒரு நாளாவது காற்று மாசு படாமல் இருக்க ஜூன் 15ம் தேதி உலக காற்று தினமாக கொண்டாடப் படுகிறது.
இந்த காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் தான், எனவே ஐ.நா சபை சார்பில் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 15ம் தேதி உலக காற்று தினமாக அறிவித்துள்ளது.
இதை தடுக்காமால் விட்டால் 2030ல் காற்று மாசால் இறப்பவர்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயர்ந்து விடும் எனவும் தெரிவித்துள்ளது.