ஜோஸ் அலுக்காஸ் நகைகடையில் திருட்டு.. சிக்கிய ஆசாமிக்கு என்ன தண்டனை தெரியுமா..?
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடிய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையின் பின்புறத்தில் சுவரைத் துளையிட்டுக் நள்ளிரவு புகுந்து முகமூடி அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் நகைகளைத் திருடிச் சென்றார்.
கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819.865 கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.758 கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240.358 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ்கள், 100.577 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கட்சியை ஆய்வு செய்துள்ளனர், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி களை ஆய்வு செய்து மர்ம ஆசாமி சென்ற திசைகளை வைத்து மர்ம ஆசாமியை பிடித்துள்ளனர்.
பின் நகைகளைப் பத்திரமாக மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் ஒப்படைத்தனர், மேலும் நகை திருடிய ஆசாமியை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று ஜே.எம்.4 நீதிபதி ரோஸ் கலா முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால் இதில் ஆஜரான டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 1000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..