திருப்பத்தூருக்கு வரும் அந்த 2.0 திட்டம் என்னனு தெரியுமா..?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குப்பைகளை நாள்தோறும் சேகரிக்கப்பட்டு ஆங்காங்கே மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வளையம்பட்டு பகுதியில் உள்ள உரகிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் உரகிடங்கில்பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு உள்ள குப்பைகளை சுவச் பாரத் மிஷன் 2.20 திட்டத்தின் கீழ் 2 கோடியே 57 லட்சம் ஒதுக்கீடு செய்து பயோமைனிங் முறையில் பிரிக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் ராஜேந்திரன், , ஒப்பந்ததாரர் கோகுல கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பணியானது ஒரு ஆண்டு காலத்திற்குள் 35 ஆயிரம் டன் குப்பைகளை பிரித்தாக வேண்டும். இந்த பணிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் துறை தலைவர் முன்னிலையில் நடத்தப்படும்.
இந்த பணியை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் இயங்கி வரும் ஐஸ் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..