நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் ஆரின் அடுத்த படம் குறிதான் அத்தகவல் பரவலாக பரவி வருகிறது. அதில், இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்திடம் அரசியல் கதையை கூறியதாக தகவல் கசிந்து வருகிறது.
வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியாகவுள்ளதால் திரையுலகமே பரபரப்பான சூழலிலுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதில். விக்னேஷ் சிவன் அஜித்திடம் முதலில் ஒரு அரசியலை மையமாக கொண்ட கதையை கூறியதாகவும் அதற்கு அஜித்து முப்பு தெரிவித்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதன் பிறகு அஜித் நடித்த முகவரி படத்தைப் போன்ற கிளாசிக் கதையை விக்னேஷ் சிவன் கூறியதாகவும் அதற்கு அஜித் உடனே ஓகே சொன்னதாகவும் தெரிகிறது.
துணிவு படம் வெளியாகும் அதே நாளில் அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவரின் உலக சுற்றுப்பயணத்தை அவர் தற்போது ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை குறித்தான தகவல்கள் துணிவு படத்தின் வெளியீட்டுக்கு பிறகு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.