தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி எப்பொழுது தெரியுமா..?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி தொடங்கும். இந்த ஆண்டும் தீபாவளி முன்பதிவு தேதி தொடங்க இருக்கிறது.
நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாட இருக்கும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த சமையத்தில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த சமையத்தில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் அதிகரிக்கப் பட்டாலும்.
பேருந்து மற்றும் ரயில்களில் இருக்கை சீட்டுகள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயணிகளுக்கு எளிதாக மாற்ற 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை தொடங்கிவிடும்.
இந்த ஆண்டும் ஜூலை 12ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி தொடங்க இருக்கிறது.
ஜூலை 12ம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும்,
ஜூலை 13ம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ம் தேதியும்,
ஜூலை 14 ம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் நவம்பர் 11ம் தேதியும்,
ஜூலை 15ம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் நவம்பர் 12ம் தேதியும்,
ஜூலை 16ம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் நவம்பர் 13ம் தேதியும்,
பயணிக்க முடியும் என்று இந்திய தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் முன்பதிவிற்காக https://www.irctc.co.in/nget/train-search சில வெப்சைட் களும், போன் பே, ஜி பே மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவுறுத்தியுள்ளது.