சித்திரை மாதத்தில் வழிபட வேண்டிய முக்கிய கோவில்கள் எது தெரியுமா ?
திருக்கண்ணமங்கை :
நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் திருவாரும் ஒன்று. திருவாருக்கு அருகேயுள்ள பக்தவச்சலப் பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு மிக்கது. திருமாலின் திருமகளான மகாலட்சுமியின் திருமணம் இக்கோவிலில் நடைபெற்றதால்.
தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். மகாலட்சுமி முதலில் பாற்கடலில் இருந்து தோன்றி, பெருமாளை திருமணம் செய்துக் கொள்வதற்காக இங்கே வந்து தவம் இருந்து. பெருமாளை மணம் முடித்துக் கொண்டதால், லட்சுமி வனம் மற்றும் பெரும்புறக் கடல் என இருப்பெயர்கள் உண்டு.
திருமணம் ஆகாதவர்கள் இத் திருத்தளத்தில் வந்து, முழு மனதுடன் வேண்டி விளக்கு ஏற்றினால் விரைவில் திருமணம் ஆகும். என்பது ஐதிகம் என இந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
திருநின்றவூர்:
மகாலட்சுமி வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு இங்கே வந்து நின்றதால். இத் திருத்தலத்திற்கு திருநின்றவூர் என்ற பெயர் உண்டு.
சமுத்திர ராஜா லட்சுமி தேவியை சமாதானம் செய்ய, “என்னை பெற்ற தாயாரே “என வேண்டியதால்.
மகாலட்சுமிக்கு இக்கோவிலில் ” என்னை பெற்ற தாயார்” என அழைக்கப்படுவார்.
இத் திருத்தலத்திற்கு சென்று அங்கு இருக்கும் கடவுளை வழி பட்டால். செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
திருப்பத்தூர் :
சிவபெருமான் தன்னிடம் உள்ள அடியார்களுக்கு பலமுறை திருத்தாண்டவத்தை காண்பித்துள்ளார். ஒருமுறை திருமகள் சிவபெருமானிடம் திரு தாண்டவம் செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
திருமகளின் வேண்டுகோளை நிறைவு செய்ய, சிவபெருமான் திருப்பத்தூரில் திரு தாண்டவம் செய்துள்ளார். எனவே இதை லட்சுமி தாண்டவம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு காட்சி அளித்த சிவபெருமானிற்கு திருமகள். பூஜை செய்து வணங்கினார். இக்கோவிலில் உள்ள தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்க்கும் என சொல்லப் படுகிறது.
மேலும் கூடலூர், திருவாலி, திருத்தங்கள், அரசர்கோயில், கொற்கை, திருச்சி ஸ்ரீரங்கம், பேளூர் கரடிப்பட்டி, திருச்சானுர், தாளக்கரை திண்டிவனம், வரகூர், நரசிங்கபுரம், ராம்பாக்கம், லால்குடி – இடையாற்று மங்களம், கீழையூர், மாமாகுடி, உத்தமர்கோவில். போன்ற திரு தலங்களையும் சென்று வழிபடுவது விஷேசம் அளிக்கும்.