உலகிலேயே உயரமாக பறக்கும் பறவை எது தெரியுமா..?
உலகிலேயே மிக அதிக உயரத்திற்கு பறக்கும் பறவை, மத்திய தெற்கு ஆசியாவில் வாழும் “பார் ஹெட்டடு ஹூஸ்” பறவை தான். இதை ( வரித்தலை வாத்து ) என்றும் அழைப்பார்கள். இவை வருடத்திற்கு மூன்று அல்லது எட்டு முட்டைகளை இடும்.
இந்த வகை பறவைகள் 27,825 அடி உயரம் வரை பறக்கும். உயர உயர செல்லும் பொழுது ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதை தாங்கும் அளவிற்கு இந்த வகை பறவைகளின் உடல் அமைப்பு இருக்கும். இதன் வேகம் மணிக்கும் 80கிமி முதல் 1000 கிமி வரை பறக்கும்.
இந்த வகை பறவைகளின் நீளம் 71-76 செ.மீ, எடை 1.87 – 3.2 கிலோ கோடை காலத்தில் மட்டும் மலை, ஆறுகளை வாழ்விடமாக வைத்துக்கொள்ளும்.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..